தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக மீண்டும் தொடர் போராட்டம்

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரியும், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு கோரியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் இணைந்து மாதாமாதம் முன்னெடுக்கும் தொடர் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் (28.06.2026), பெளர்ணமி நாளான திங்கட்கிழமையும் (29.06.2026) தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில் நடாத்தப்படும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை-04 மணி முதல் மாலை-06 மணி வரையும், பெளர்ணமி நாளான திங்கட்கிழமை காலை-07 மணி முதல் மாலை-06 மணி வரையும் தொடர் போராட்டம் இடம்பெறும். போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.