வரலாற்றுச் சிறப்பு மிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயப் பராபவ வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(28.06.2026) காலை-09 மணியளவில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது முத்தேர்களின் வீதி உலா சிறப்பாக இடம்பெற்றதுடன் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டனர்.





