பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அண்மையில் வெளியிட்ட கருத்துகள், தற்போதைய அரசியல் சூழல் தொடர்பாக எதிர்க்கட்சியினரின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய நிர்வாக மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள் காரணமாக, பழைய அரசியல் நடைமுறைகள் தொடர முடியாத சூழல் உருவாகியுள்ளதுடன், அதுவே எதிர்க்கட்சியினரின் கருத்துக்களில் பிரதிபலிக்கிறது என்று கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசியல் சூழலில் புதிய விதிமுறைகளின்படி, அமைச்சர்கள், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் தங்களது சொத்து விபரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்களை கட்டயமாகச் சமர்பிக்க வேண்டும். இவை அனைத்தும் டிஜிட்டல் அமைப்பில் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வெளிப்படையான டிஜிட்டல் முறையினால் எதிர்காலத்தில் பழைய பாணியில் ஊழல் அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும்.
ஏனெனில் அவர்கள் தங்களது நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கு முறைகேடாகப் பணம் சம்பாதிக்க வழிவகுக்க முடியாது என்பதுடன் வரி வலையமைப்பில் இருந்தும் தப்பிக்க முடியாது. இதனால் கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்குப் பொறுக்கூற வேண்டியிருக்குமோ என்ற பயமும் தங்களின் வாரிசுகளுக்காக அமைத்து வைத்திருந்த ஊழல் அரசியல் பாதை முற்றிலும் இல்லாமல் போய்விட்டதே என்ற ஆதங்கமும் எதிர்க்கட்சியினருக்கு எழுந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, எப்போதும் சுய இலாபத்துக்காக வாய்ப்புள்ள பக்கம் தாவிவிடும் அரசியர் குணம் கொண்டவர். எதிர்க்கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் தங்களது மனதிற்குள் மறைத்து வைத்திருக்கும் உண்மையை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஏதேனும் பெருளாதாரம் அல்லது இயற்கை பேரிடரால் வீழ்ந்துவிடாதா அல்லது பாதாள உலகக் குழுக்களுடன் இணைந்து இந்த ஆட்சியை கவிழ்த்துவிட முடியாதா என்ற இரகசியக் கனவோமு தான் எதிர்க்கட்சியினர் தினமும் இரவில் தூங்க சென்று காலையில் வழிக்கிறார்கள் என்பதை தயாசிறியின் பேச்சு மிக தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது.
மேலும், தற்போதைய பொருளாதாரச் சூழல் நேர்மறையான வளர்ச்சியை நோக்கி நகர்ந்துள்ளது. உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அதன் நன்மைகள் சாதாரண மக்களைச் சென்றடையத் தொடங்கியுள்ளது. அண்மையில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டமை, அத்துடன் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் தராசு பாராது முன்னெடுக்கப்படும் சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் இதற்கு மிக முக்கிய சான்றுகளாகும்.
கடந்த காலங்களில் நிலவிய ஊழல், மோசடி மற்றும் சுயநல அரசியல் கலாச்சாரமே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. தற்போதைய அரசு நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை வேகமாகவும், தொடர்ச்சியாகவும் மேம்படுத்தி வருவதுடன், சர்வதேச நாணய நிதியம் கூட, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை அடைந்துள்ள இந்த வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியைப் பாராட்டியுள்ளது.Beaches & Islands
மேலும், வரி வசூலிப்பு முறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டுள்ளதால், வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மக்களுக்குப் பரவலான பொருளாதாரச் சலுகைகள் கிடைக்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக 2027 ஆம் ஆண்டளவில் வரி விகிதங்கள் கணிசமாகக் குறைக்கப்படும் என்றார்.



