யாழில் நீண்ட காலம் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(25.4.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருநகர் பகுதியில் வைத்து 31 வயதுடைய சந்தேகநபர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 2 கிராம் 35 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



