தமிழகத்தில் 2029-ம் ஆண்டு தேசிய விளையாட்டு போட்டிகள்

2029-ம் ஆண்டு தேசிய விளை​யாட்டு போட்​டிகளை தமிழகத்​தில் நடத்த வாய்ப்​பளிக்க வேண்​டும் என்று மத்​திய இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​ வி​யா​விடம் அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா கோரிக்கை விடுத்​துள்​ளார்.

தமிழக அரசின் பொதுப்​பணி, நெடுஞ்​சாலைகள் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத்​ துறை அமைச்சர் ஆதவ் அர்​ஜூனா நேற்று டெல்​லி​யில் மத்​திய இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்​டுத்​துறை அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யாவை சந்​தித்​தார்.

அப்​போது, தமிழகத்தை இந்​தி​யா​வின் முன்​னணி விளையாட்டு மாநில​மாக உயர்த்​தும் நோக்​கில் பல்​வேறு முக்​கிய முன்​மொழிவு திட்​டங்​களை முன்​வைத்​தார். சர்​வ​தேச மற்​றும் தேசிய போட்​டிகளை வெற்​றிகர​மாக நடத்​திய அனுபவத்​தின் அடிப்​படை​யில், 2029-ம் ஆண்டு தேசிய விளை​யாட்​டுப் போட்​டிகளை தமிழகத்​தில் நடத்த வாய்ப்​பளிக்க வேண்​டும்.

இதனால், தமிழகத்​தின் நீடித்த உள்​கட்​டமைப்பு மேம்​பாட்​டுக்கு வலு​வான அடித்​தள​மாக இது அமை​யும் என்று ஆதவ் அர்​ஜுனா தெரி​வித்​தார். மேலும், திருச்சி மாவட்​டத்​தில் 48 ஏக்​கர் பரப்​பள​வில் அமைய​வுள்ள ‘திருச்சி ஒலிம்​பிக் அகாட​மி’ வளாகத்​தில், தற்​காப்பு கலைகளுக்​கான தேசிய முதன்மை நிலை மையம் அமைப்​ப​தன் மூலம் விளை​யாட்டு மேம்​பாட்டை மேலும் வலுப்​படுத்த முடி​யும்.

ஒலிம்​பிக் விளை​யாட்​டான ‘ஏறு விளை​யாட்​டு’ பயிற்​சிக்​காக, தற்​போதைய விளை​யாட்டு சூழல் மற்​றும் உள்​கட்​டமைப்பு வசதி​களைக் கணக்​கில் கொண்​டு, சென்​னை​யில் சர்​வ​தேச தரத்​திலான ஏறு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

நாட்​டிலேயே அதிக இளைஞர்​களை​யும், வலு​வான விளை​யாட்டு கலாச்​சா​ரத்​தை​யும் கொண்ட மாநிலங்​களில் ஒன்​றாக தமிழகம் திகழ்​வ​தால், தமிழகத்​தின் ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் குறைந்​தது 2 விளை​யாட்டு பிரிவு​களுக்கு முன்​னுரிமை வழங்கி கூடு​தலாக ‘கேலோ இந்​தியா மையங்​கள்’ மற்​றும் ‘கேலோ இந்​தியா மாவட்ட மையங்​களை’ விரி​வாக்​கம் செய்ய இந்த ஆலோ​சனை​யின் போது வலி​யுறுத்​தப்​பட்​டது.

தேசிய ஊக்​க மருந்து தடுப்பு கழகத்​துடன் இணைந்​து, ஆராய்ச்சி மற்​றும் திறன் மேம்​பாட்​டிற்​கான ஒரு தேசிய மைய​மாக செயல்​படும் வகை​யில், தேசிய ஊக்​க மருந்து தடுப்பு கல்வி மற்​றும் விழிப்​புணர்வு மையம் சென்​னை​யில் அமைக்க முன்​மொழியப்​பட்​டுள்​ளது.

மதுரை மாவட்​டத்​தில் ஏற்​கெ​னவே அமைந்​துள்ள ஒலிம்​பிக் அகாடமி மற்​றும் உயர் செயல்​திறன் மையங்​களின் கட்​டமைப்பை அடிப்​படை​யாக கொண்​டு, இந்​தியா முழு​வதும் உள்ள விளை​யாட்டு வீரர்​களுக்கு ஒருங்​கிணைந்த சேவை​களை வழங்​கும் நோக்​கில், தேசிய விளை​யாட்டு மையம், விளை​யாட்டு மருத்​து​வம், காயம் மீட்பு மற்​றும் செயல்​திறன் மேம்​பாட்டு மையத்தை மதுரை​யில் அமைப்​பது உள்​ளிட்ட கோரிக்​கைகள் அடங்​கிய மனு இந்த சந்​திப்​பின் போது வழங்​கப்​பட்​டது.