ஜேர்மனியில் காணாமல் போகும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளை காணவில்லை
ஜேர்மனியில் காணாமல் போகும் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது கிட்டத்தட்ட 1,933 குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ஜேர்மன் கூட்டாட்சிக் குற்றவியல் காவல் அலுவலகத்தின் தரவுகளின் படி தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குழந்தைகள் காணாமல் போகும் எண்ணிக்கை 6.8 சதவீதம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு சுமார் 1,810 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகரிக்கும் மீட்பு நடவடிக்கை
ஒருபுறம் காணாமல் போனதாக பதிவாகும் வழக்குகள் அதிகரித்து வந்தாலும், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பொலிஸாரின் நடவடிக்கையும், அதன் வெற்றி விகதமும் சிறப்பாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தரவுகளின் படி, காணாமல் போகும் குழந்தைகளில் 96 சதவீதத்தினர் 3 மாதங்களுக்குள் பத்திரமாக மீட்கப்பட்டு விடுகின்றனர்.
பெற்றோர்களால் கடத்தப்படுதல், வீட்டை விட்டு குழந்தைகள் வெளியேறுதல் ஆகியவை குழந்தைகள் காணாமல் போவதற்கான காரணமாக கூறப்படுகின்றன.



