பன்னாடு

உக்ரைனுக்கு ரகசியமாக அனுப்பப்படும் பிரான்ஸ் படைவீரர்கள்? ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரெஞ்சுப் படைவீரர்களை ரகசியமாக உக்ரைனுக்கு அனுப்பத் திட்டமிட்டுவருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு விடயம் என்னவென்றால், சமீபத்தில் உக்ரைனுடன் ஆயுத ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டது பிரான்ஸ்.

‘இம்ரான் கான் நலமுடன் உள்ளார்’ -அவரது சகோதரி உஸ்மா

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை செவ்வாய்க்கிழமை அன்று அவரது சகோதரி உஸ்மா கான் சந்தித்தார். சிறையில் இம்ரான் கான் கொலை செய்யப்பட்டு விட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் வெளியான

ஆப்கனில் மக்கள் முன்னிலையில் 13 பேரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் 13 பேரை கொலை செய்தவருக்கு மக்கள் முன்னிலையில் மைதானம் ஒன்றில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தண்டனையை சிறுவன் ஒருவர் நிறைவேற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் கிழக்கு பகுதியில்

ஹொங்கோங் தீ விபத்து குறித்து விசாரணை செய்ய சுயாதீனக்குழு ஒன்றை நியமிக்க திட்டம்

ஹொங்கோங்  தாய் போ மாவட்டத்தில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து குறித்த விசாரணை செய்ய அந்நாட்டு நீதிபதி தலைமையிலான சுயாதீனக்குழு ஒன்றை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்

ஜமெய்கா மெலிசா புயல் ; சர்வதேச நிறுவனங்களிடமிருந்து 6.7 பில்லியன் டொலர் நிதியுதவி

ஜமெய்காவில் தாக்கிய மெலிசா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவுகளில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகளுக்காக சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அதிகபட்சம் 6.7 பில்லியன் டொலர் நிதியுதவி கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச

நிவாரண நன்கொடைகள் வழங்கும் அப்பிள் நிறுவனம்

சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதாக எக்ஸ் தளத்தில் அப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அறிவித்துள்ளார். தாய்லாந்து,

சிறிலங்காவுக்கு நிவாரண உதவி : இந்தியா – பாகிஸ்தான் வான்வெளி சர்ச்சை !

இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயல் பேரழிவுக்கு மனிதாபிமான உதவி அனுப்ப பாகிஸ்தான் இந்திய வான்வழியை பயன்படுத்த அனுமதி கோரியதற்கு இந்தியா உடனடியாக அனுமதி வழங்கியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக பி.ரி.ஐ செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

ஹசீனாவுக்கு 5.. சகோதரிக்கு 7.. மருமகளுக்கு 2 ஆண்டு சிறை – வளைத்து வளைத்து தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மற்றொரு ஊழல் வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புர்பச்சல் நியூ டவுன் திட்டத்தில் நிலம் ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றம் அவருக்கு

இம்ரான் கான் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டம்- ராவல்பிண்டியில் ஊரடங்கு உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கானுக்கு ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இம்ரான்கானை சந்திக்க குடும்பத்தினருக்கு சில மாதங்களாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்

இந்தோனேஷியாவில் பெரும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்வு

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமாத்திரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட  மூன்று புயல்களினால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில்  சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631  ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பல பகுதிகளில்