பொன்னாலையில் ஊடகவியலாளர்களான ரூபன், கடம்பேசுவரனின் நினைவேந்தல் நிகழ்வு

ஊடகவியலாளர்களான சி.செ.ரூபன் மற்றும் ம.ந.கடம்பேசுவரன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வு சனிக்கிழமை (25.04.2026) பிற்பகல் பொன்னாலை கண்ணபிரான் படிப்பகத்தில் ஊடகவியலாளர் ந.பொன்ராசா தலைமையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஊடகவியலாளர் ரூபனின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தலும், ஊடகவியலாளர் பண்டிதர்.கடம்பேசுவரன் ஐயாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலும் ஒருசேர அனுஷ்டிக்கப்பட்டது.   இந் நிகழ்வில் படிப்பகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர், யுவதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.