உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: வீரபாண்டியன் வலியுறுத்தல்

உரங்​களின் விலை உயர்வை கட்​டுப்​படுத்த மத்​திய அரசு உடனடி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என, இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் வீர​பாண்​டியன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்​து, அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: அமெரிக்க ஏகா​திபத்​தி​யத்​தின் சதி​யால் மத்​திய கிழக்கு நாடு​களில் நில​விவரும் போர் பதற்​றச் சூழல் காரண​மாக​வும், ஹார்​முஸ் நீரிணை வழி​யான வணி​கக் கப்​பல் போக்​கு​வரத்து முடக்​கப்​பட்​டுள்​ள​தா​லும், உலகளா​விய உர விநி​யோகச் சங்​கி​லி​யில் பெரிய பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது.

வெளி​நாடு​களில் இருந்து உரத்தை இறக்​குமதி செய்​வது மிக​வும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. டய்​-அமோனி​யம் பாஸ்​பேட்டுக்கு 60 சதவீதத்​துக்​கும் மேல் இறக்​கும​தியை சார்ந்​திருக்​கிறோம். பொட்​டாஷுக்கு ஏறக்​குறைய முழு​மை​யாக இறக்​கும​தி​யையே நம்பி உள்​ளோம்.

உள்​நாட்​டிலும், மத்​திய அரசு உர உற்​பத்​தியை அதி​கரிக்க நடவடிக்கை எடுக்​க​வில்​லை. போர் சூழலை அறிந்​து, வேளாண் உற்​பத்​திக்​குத் தேவை​யான உரங்​களை கணக்​கிட்டு இறக்​குமதி செய்​ய உரிய நடவடிக்​கையை காலத்​தில் எடுத்​திருக்க வேண்​டும். அதை​யும் செய்​ய​வில்​லை.

இதனால், முக்​கிய உரங்​களின் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. மோனோ-அமோனி​யம் பாஸ்​பேட், மோனோ-பொட்​டாசி​யம் பாஸ்​பேட், எஸ்​ஓபி மற்​றும் தண்​ணீரில் கரை​யும் உரங்​கள் போன்ற முக்​கியப் பொருட்​களின் விலை 20 சதவீதம் வரை அதி​கரித்​துள்​ளது.

இந்த விலை​யேற்​றத்​துக்குஇந்​தி​யா​வில் உர உற்​பத்​தி​யில் ஈடு​பட்​டுள்ள தனி​யார் நிறு​வனங்​களும் முக்​கியக் காரண​மாகும். இந்​திய வேளாண்மை உற்​பத்​திக்கு அவசி​ய​மான உரங்​களின் விலை ஏற்​றத்தை கட்​டுப்​படுத்​த​வும், தட்​டுப்​பாட்​டைப் போக்​க​வும் மத்​திய அரசு உடனடி நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும்.

இல்​லை​யெனில், போதிய விளைச்​சலின்றி விவ​சா​யிகள் பாதிக்​கப்​படு​வதோடு, உணவுத் தட்​டுப்​பாடும் ஏற்​படும் ஆபத்து உள்​ளது.

இவற்றை கருத்​தில் கொண்டு உரங்​களை போதிய அளவில் இறக்​குமதி செய்​ய​வும், விலை ஏற்​றத்தை ரத்து செய்​ய​வும், விலை ஏற்​றத்தை ஈடு செய்​யும் வகை​யில் உரிய நிவாரணத் தொகையை விவ​சா​யிகளுக்கு வழங்​க​வும் மத்​திய அரசு முன்வர வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்