கொழும்பு ஐந்து லாம்புச் சந்தி பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் திங்கட்கிழமை (3) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக தீயணைப்பு திணைக்களம் உடனடியாக மூன்று தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




