மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான செவ்வாய்க்கிழமை(21.11.2023) மாலை-05 மணியளவில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மூத்த போராளி பொன் மாஸ்டர் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் தொடர்ந்து மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.






