யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்திற்கான புதிய எரிகொட்டகைத் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை(10.12.2023) முற்பகல்-10.45 மணியளவில் செம்மணி இந்து மயான அபிவிருத்திச் சபையின் தலைவர் சி.இலட்சுமிகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் தியாகி அறக்கொடை நிலைய நிறுவுனர் வாமதேவன் தியாகேந்திரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய எரிகொட்டகையைத் திறந்து வைத்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் ஏற்கனவே இரண்டு எரிகொட்டகைகள் காணப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.






