இளவாலையில் மழைக்கு மத்தியிலும் வீடு வீடாக டெங்கு ஒழிப்பு

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் வருடம் தோறும் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் வரிசையில் இந்த வருடத்துக்கான டெங்கு ஒழிப்பு நடவடிக்கை   ஞாயிற்றுக்கிழமை (17.12.2023) இளவாலையில் முன்னெடுக்கப்பட்டது.

கிராம மக்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் வீடுகள் தோறும் டெங்கு நுளம்பு பெருக ஏதுவான பொருட்களான இளநீர்க் கோம்பைகள், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்கள், சிரட்டைகள் முதலான நீர் தேங்கக்கூடிய பொருட்களைச் சேகரித்து வீடுகள் தோறும் வைத்திருந்த நிலையில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்கள் மழைக்கு மத்தியிலும் நேரடியாகச் சென்று அவற்றைப் பெற்று வலிகாமம் வடக்குப் பிரதேச சபையினரிடம் ஒப்படைத்தனர்.