மழைக்கு மத்தியிலும் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கஜமுகாசூர சங்கார உற்சவம்

இணுவில் ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் ஆலய விநாயகர் ஷஷ்டி விரதத்தை ஒட்டி கஜமுகாசூர சங்கார உற்சவம்  திங்கட்கிழமை(18.12.2023) மாலை இடம்பெற்றது.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கஜமுகசூர சங்கார உற்சவத்தைக் காண வருகை தந்திருந்தனர்.