புகையிலை பயன்பாட்டினால் வருடாந்தம் 20,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதோடு, 200-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
2026 உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



