சவூதி அரேபியாவின் ராஸ் தனுராவில், சவூதி அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான அராம்கோவிற்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை (28) நிகழ்ந்துள்ளது, மேலும் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது என்றும் சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




