சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தால் பிரான்ஸ் எடுத்த நடவடிக்கை

ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்துள்ள Entry Exit திட்டத்தால், வார இறுதியில் பிரான்சுக்கு புறப்பட்ட பிரித்தானியர்கள் நீண்ட கால தாமதத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.

Entry Exit திட்டம்

ஐரோப்பிய ஒன்றியம், குறுகிய காலம் தங்குவதற்காக ஷெங்கன் பகுதிக்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத பயணிகளுக்காக, Entry Exit திட்டம் என்னும் தானியங்கி டிஜிட்டல் எல்லை பரிசோதனை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

 

அதன்படி, குறுகிய காலம் தங்குவதற்காக ஷெங்கன் பகுதிக்குள் நுழையும் ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத பயணிகள், எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்களில் தங்கள் புகைப்படம், கைரேகை, பெயர் மற்றும் பயண ஆவண விவரங்களை பதிவு செய்யவேண்டும்.விடயம் என்னவென்றால், இப்படி ஒவ்வொரு பயணியும் தங்கள் விவரங்களை அந்த தானியங்கி இயந்திரங்களில் பதிவு செய்ய நீண்ட நேரம் ஆகிறது.

இதனால், எல்லைகளில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

பிரான்ஸ் எடுத்த நடவடிக்கை

இந்நிலையில், கடந்த வார இறுதியில் பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸ் செல்வதற்காக டோவர் துறைமுகத்துக்கு வந்திருந்தார்கள் ஏராளமான பிரித்தானியர்கள்.

Entry Exit திட்டம்: சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தால் பிரான்ஸ் எடுத்த நடவடிக்கை | France Suspends Entry Exit In Border For Long Que

அவர்கள் Entry Exit திட்டத்தின் கீழ் தங்கள் விவரங்களை தானியங்கி இயந்திரங்களில் பதிவு செய்வதற்கு நீண்ட நேரம் ஆனதால், ஏராளமான வாகனங்கள் எல்லையில் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது.

பயணிகள் டோவர் துறைமுகத்தை அடைய இரண்டு மணி நேரம் காத்திருக்க நேர்ந்ததுடன், எல்லையில் Entry Exit திட்டத்தின் கீழ் தங்கள் விவரங்களை தானியங்கி இயந்திரங்களில் பதிவு செய்வதற்கு இரண்டரை மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது.

ஆகவே, பிரான்ஸ் அதிகாரிகள் எல்லையில் Entry Exit திட்டத்தின் கீழ் தங்கள் விவரங்களை தானியங்கி இயந்திரங்களில் பதிவு செய்யும் நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து, மதியம் இரண்டு மணிக்குமேல் போக்குவரத்து வேகமாக நகரத் துவங்கியுள்ளது.

அதாவது, தானியங்கி இயந்திர பரிசோதனைகளுக்கு பதிலாக அதிகாரிகளே பயணிகளை வேகமாக சோதனை செய்து பயணிக்க அனுமதித்துள்ளார்கள்.

பின்னர், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் மீண்டும் Entry Exit திட்டத்தின் கீழ் பயணிகள் தங்கள் விவரங்களை தானியங்கி இயந்திரங்களில் பதிவு செய்யும் முறைமை தொடர்ந்துள்ளது.