மாகாண சபைத் தேர்தல் முறைமை தவிர்த்து ஏனைய தேர்தல் முறைமைகளை மீளாய்வு செய்து, விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச். அபேரத்ன தலைமையில் விசேட நாடாளுமன்ற செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (5) நடைபெற்ற அமர்வின்போது சபைக்கு அறிவிப்பு விடுக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சபாநாயகர் மேலும் அறிவித்ததாவது,
தேர்தல் முறைமைகளை மீளாய்வு செய்வதற்காக மாகாண சபைத் தேர்தல் முறைமை தவிர்த்து ஏனைய தேர்தல் முறைமை பற்றி ஆராய்ந்து விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எ.எச்.அபேரத்ன தலைமையில் விசேட நாடாளுமன்ற செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் சேவையாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் வட்டகல, உபாலி பன்னிலகே, முனீர் முழப்பர், ரவி கருணாநாயக்க, ஜே.சி. அலவத்துவல, ஹர்ஷன ராஜகருண, சண்முகம் குகதாசன், ருவன் திலக் ஜயகொடி, துசாரி ஜயசிங்க, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், சந்திம ஹெட்டியராச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.





