யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இணைந்து தியாகதீபம் திலீபன் நினைவாக ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு ” உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம்” எனும் தொனிப் பொருளில் புதன்கிழமை (24.09.2025) காலை-09 மணி முதல் மாலை-03 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 48 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.






