இலங்கையில் உள்ள மாவட்டங்களில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது!

இலங்கையில் உள்ள மாவட்டங்களில் காணிப்பிரச்சினை தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது என கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மாவட்டத்தின் ‘5 ஆண்டுச் செயலாற்றுகை’ தொடர்பான விசேட மீளாய்வுக் கூட்டம், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (23)  நடைபெற்றது.

இதில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களிலும் காணிப் பிரச்சினைகள் அதிகளவில் தீர்க்கப்படாத மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் காணிப் பிணக்குகள் எதுவுமற்றநிலையில் 8ஆயிரத்து 600 பேர் காணி ஆவணங்களைக் கோரி விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இச்செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், எதிர்பார்க்கப்பட்ட மட்டத்தில் இதற்கான முன்னேற்றம் எட்டப்படவில்லை இந்த மாவட்ட மக்களுக்கு இந்த பிரச்சனையை தீர்க்க அனைத்துதரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

சமீபத்திய செய்திகள்