வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வத்தளை – ஹுணுபிட்டிய ரயில் கடவைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, 115 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால், நேற்று (19) மாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

சந்தேகநபர் பாதுக்கை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.