“வேட்பாளரல்ல; சின்னத்துக்குதான் மக்கள் வாக்களிக்கின்றனர்” – சவுமியா அன்புமணி கருத்து

 ​விழுப்​புரம் அடுத்த திரு​வா​மாத்​தூர் அபி​ராமேஸ்​வரர் கோயி​லில் நடை​பெற்ற திருமண நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற பசுமை தாயக தலை​வரும், தரு​மபுரி பாமக எம்​எல்​ஏவு​மான சவுமியா அன்​புமணி மணமக்​களை வாழ்த்​தி​னார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் தெரி​வித்​த​தாவது: நீட் தேர்வு மற்​றும் மும்​மொழிகொள்கை குறித்து பிரதமரிடம் முதல்​வர் விஜய் பேசாதது குறித்து கேட்​கிறீர்​கள். தமிழகத்​தின் கோரிக்​கைகளை டெல்​லிக்கு கொண்டு செல்ல வேண்​டும். மேகே​தாட்டு அணை தொடர்​பாக பாமக கொள்​கை​யில் தெளி​வாக குறிப்​பிடப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் நீர் மேலாண்மை குறித்​தும் பாமக தலை​வர் அன்​புமணி தெளி​வாக குறிப்​பிட்​டுள்​ளார். மழை நீரை சேமித்து விவ​சா​யத்தை செழிக்க வைப்​பது எப்​படி என்பது குறித்தும் தெரி​வித்​துள்​ளார்.

இதற்​காக சட்​டப் பேர​வை​யிலும் குரல் கொடுப்​போம், வெளி​யே​யும் குரல் கொடுப்​போம். பாமக ஆதர​வுடன் வெற்றி பெற்ற அதி​முக எம்​எல்​ஏ.க்​கள் 4 பேர், தவெக​வில் இணைந்​திருப்​பது ஆரோக்​கிய​மான அரசி​யலா என கேட்​கிறீர்​கள். இது வரவேற்​கத்​தக்க விஷயமல்ல, துர​திஷ்ட​வச​மான விஷ​யம் என அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

ஒரு வேட்​பாளரின் பெயரை வைத்து யாரும் வாக்​களிக்​க​வில்​லை. சின்​னத்தை வைத்​து​தான் வாக்​களித்​துள்​ளனர். வெற்றி பெற்ற நபர்​கள் அந்த சின்​னத்​துக்​கும், அந்த கட்​சிக்​கும் உரிய மரி​யாதை​யையும், முக்​கி​யத்​து​வத்​தை​யும் அளிக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.