சிரியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் முதல் புகலிடக்கோரிக்கையாளர்

ஜேர்மனி, சிரிய அகதிகளை சிரியாவுக்கு திருப்பி அனுப்பப்போவதாக கூறிவரும் நிலையில், மற்றொரு நாடு சிரிய புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை சிரியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளது.

சிரியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் முதல் புகலிடக்கோரிக்கையாளர்

ஆம், பிரான்சிலிருந்து ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் சட்டவிரோத புலம்பெயர்வோரை பிரான்சுக்கே திருப்பி அனுப்புவதற்காக இரு நாடுகளுக்குமிடையில் ’one in, one out’ என்னும் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி சட்டவிரோத புலம்பெயர்வோர் சிலர் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கும், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கும் அனுப்பப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், அப்படி பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு அனுப்பப்பட்ட சிரியா நாட்டவரான புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை, பிரான்ஸ் நாடு சிரியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளது.

 

சிரியாவுக்கு திருப்பி அனுப்பப்படும் முதல் புகலிடக்கோரிக்கையாளர் | Asylum Seeker Sent France One In One Out Returned

விடயம் என்னவென்றால், புகலிடக்கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப பாதுகாப்பான நாடுகள் என ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்டுள்ள நாடுகளில் சிரியா இல்லை.

அப்படியிருந்தும், பிரான்ஸ் நாடு அந்த புகலிடக்கோரிக்கையாளரை சிரியாவுக்கு திருப்பி அனுப்ப உள்ளது.

அந்த புகலிடக்கோரிக்கையாளர், சிரியாவிலிருந்து தன் குடும்பத்துடன் தப்பி வந்த நிலையில், கடத்தல்காரர்கள் அவரை மட்டும் அவரது குடும்பத்தினரிடமிருந்து பிரித்து பிரித்தானியாவுக்கு அனுப்பியுள்ளார்கள்.

தனது குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என்பது இன்னமும் தனக்குத் தெரியாது என்று கூறும் அவர், நான் மீண்டும் பிரித்தானியாவுக்குத் திரும்பினால் அவர்கள் என்னை தடுப்புக் காவலில் அடைத்துவிடுவார்கள், நான் சிரியாவுக்குச் சென்றாலோ குர்திஷ் படைகள் என்னைப் பிடித்துக்கொள்வார்கள், நான் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை என்கிறார்.