கடந்த 01ஆம் திகதி அதிகாலை 1990 – தேசிய நோயாளர் காவு வண்டி சேவை பிரிவினின் பணியாளர்கள் இருவர் செல்வபுரம் பகுதியில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று அதிகாலை 01 மணியளவில் மாங்குளம் சேவைக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டதற்கு அமைய நோயாளியை ஏற்றுவதற்காக சென்றபோது குறித்த நோயாளியின் வீட்டில் இருந்தவர்களும் ஏனைய நபர்களும் இரண்டு அவசர நோயாளர் காவு வண்டி பணியாளர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது தாக்குதலுக்குள்ளான நோயாளர் காவு வண்டி சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும், 1990 இலக்க அழைப்புக்கு இலவச நோயாளர் காவு வண்டி சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கு அமைய இரவு வேளையிலும் சேவைகளை அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்பட்ட வருகின்ற நிலையில், இவ்வாறான சம்பவங்கள் சேவையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது.




