கிரிஷ் கொடுக்கல் – வாங்கல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூலை மாதம் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான ஆரம்பகட்ட வழக்கு விசாரணைக்கு முந்தைய மாநாடு இன்று வெள்ளிக்கிழமை (29) நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்தே, இந்த வழக்கின் பிரதான விசாரணையை ஜூலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.




