தம்புத்தேகம பகுதியில் நல்லச்சிய நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தம்புத்தேகம, நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரை வழியாக நீர் பாயும் கால்வாயில் நேற்று சனிக்கிழமை (18) பிற்பகல் இரண்டு ஆண் சடலங்கள் காணப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் 19 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் பெந்திவெவ மற்றும் திம்பிரிகஸ்கடவல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலங்கள் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





