வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய முன்னாள் நிர்வாகத்திடம் ரிஐடி இரண்டு மணிநேரம் விசாரணை!

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் (ரிஐடி) வியாழக்கிழமை (09.10.2025) இரண்டு மணிநேரம் தீவிர விசாரணை நடாத்தினர்.
வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் செ.சசிகுமார் மற்றும் செயலாளர் து.தமிழ்ச்செல்வன் ஆகியோரை விசாரணையொன்றுக்கு வருமாறு வவுனியா பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினரால் (ரிஐடி) கடந்த சில தினங்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இருவரும் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் ஆலயம் தொடர்பாகவும், குடும்ப விபரங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஏனைய பல விடயங்கள் தொடர்பாகவும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.