தனி​யார் பள்​ளி​களில் கட்டண விவரங்​களை வெளிப்​படை​யாக தெரிவிக்க நடவடிக்கை

தமிழகம் முழு​வதும் உள்ள அனைத்து தனி​யார் மெட்​ரிக் மற்​றும் சிபிஎஸ்இ பள்​ளி​கள், அரசு உதவி பெறும் பள்​ளி​கள் மாணவர்​களிடம் வசூலிக்க வேண்​டிய கல்விக் கட்டண விவரங்​களை பள்​ளி​யின் வாயில்​கள் முன்​பாக​வும், இணை​யதளம் மூல​மாக​வும் வெளிப்​படை​யாக வெளி​யிடும் வகை​யில் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென தனி​யார் பள்​ளி​களுக்​கான இயக்​குநருக்கு மாநில தகவல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

கோவை மாவட்​டத்​தைச் சேர்ந்த எம்​.லி​யாகத் அலி என்​பவர், கடந்த 2022 அக்​.26 அன்று தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் தனி​யார் மெட்​ரிக் மேல்​நிலைப் பள்​ளி​களில் அரசின் வழி​காட்​டு​தலின்​படி வசூலிக்க வேண்​டிய கல்விக் கட்டண விவரங்​களைக் கோரி மாவட்ட கல்வி அதி​காரி​களுக்கு மனு அளித்​திருந்​தார்.

இந்த மனு முதலில் மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வல​கத்​திலிருந்து மாவட்ட கல்வி அலு​வலருக்​கும், பின்​னர் அங்​கிருந்து அனைத்து மெட்​ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கும், அதன்​பிறகு மீண்​டும் தனி​யார் பள்​ளி​களுக்​கான மாவட்ட கல்வி அலு​வலருக்​கும் அனுப்பி வைக்​கப்​பட்​டது.

இருப்​பினும் உரிய காலக்​கெடு​வுக்​குள் எந்​தத் தகவலும் அளிக்​கப்​ப​டாத​தால் லியாகத் அலி இது தொடர்​பாக மாநில தகவல் ஆணை​யத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார். இந்த மேல்​முறை​யீட்டு மனுவை விசா​ரித்த மாநில தகவல் ஆணை​யர் வி.பி.ஆர்​.

இளம்​பரிதி பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் அடிப்​படை நோக்​கமே வெளிப்​படைத்​தன்​மை​தான். மனு​தா​ரர் கோரிய தகவல்​களை மூன்​றரை ஆண்​டு​களாக முழு​மை​யாக வழங்​காமல் அதி​காரி​கள் இழுத்​தடிப்பு செய்து வந்​துள்​ளனர்.

இறு​தி​யாக இணை​யதளத்​திலிருந்து பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என தெரி​வித்​துள்​ளனர். இதற்​காக தற்​போது பணி​யில் உள்ள பொதுத் தகவல் அலு​வல​ரான கோவை மாவட்ட கல்​வித் துறை அதி​காரி, மனு​தா​ரருக்கு ஏற்​பட்ட மன உளைச்​சலுக்கு ரூ.25 ஆயிரத்தை இழப்​பீ​டாக வழங்க வேண்​டும். இந்த தொகையை பெற்​றுக்​கொண்​டது குறித்து மனு​தா​ரர் வரும் ஜூன் 15 அன்று நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண்​டும்.

அதே​போல இந்த மனுவை தேவை​யில்​லாமல் மாவட்ட கல்வி அதி​காரிக்​குத் திருப்​பி​விட்​டது ஏன் என்​பது குறித்​தும், இதற்​காக ஏன் உங்​களுக்​கும் தலா ரூ.25 ஆயிரத்தை அபராத​மாக விதிக்​கக்​கூ​டாது என்​பது குறித்​தும், அப்​போது பணி​யில் இருந்த முதன்​மைக் கல்வி அதி​காரி மற்​றும் அவரது நேர்​முக உதவி​யாளர், தனி​யார் பள்​ளி​களுக்​கான மாவட்ட கல்வி அதி​காரி ஆகியோர் வரும் ஜூன் 15-க்​குள் நேரில் ஆஜராகி விளக்​கமளிக்க வேண்​டும்.

பெற்​றோர் தங்​களது குழந்​தைகளின் எதிர்​காலம் கரு​தி, பொருளா​தா​ரத் தகு​தி​யை, வரம்பை மீறி கல்விக்​காக அதிக பணம் செல​வழித்து வரு​கின்​றனர். அந்த ஒவ்​வொரு ரூபாய்க்​கும் வெளிப்​படைத்​தன்​மை​யுடன் கணக்கு விவரங்​களை தெரிவிக்க வேண்​டியது கல்வி நிறு​வனங்​களின் அத்​தி​யா​வசி​யக் கடமை. எனவே தனி​யார் பள்​ளி​களுக்​கான இயக்​குநர் எஸ்​.சுகன்​யாவை இந்த ஆணை​யம் பொதுத்​தகவல் ஆணை​ய​ராக நியமிக்​கிறது.

அவர் இனிவரும் காலங்​களில் அரசு உத்​தர​வுப்​படி அனைத்து தனி​யார் மெட்​ரிக் மற்​றும் சிபிஎஸ்இ பள்​ளி​கள், அரசு உதவி பெறும் பள்​ளி​களின் கல்விக் கட்டண விவரங்​களை வகுப்பு வாரி​யாக பள்ளி வாயில்​கள் முன்​பாக​வும், இணை​யதளங்​களின் மூல​மாக​வும் வெளிப்​படை​யாக வெளி​யிட வேண்​டும் என அனைத்து பள்ளி நிர்​வாகங்​களுக்​கும் அறி​வுறுத்த வேண்​டும்.

கட்டண விவரங்​களை மாணவர் சேர்க்​கை​யின்​போது வழங்​கப்​படும் விண்​ணப்​பங்​களி​லேயே முறை​யாக அச்​சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்​டும். இந்த உத்​தர​வுப்​படி பள்ளி நிர்​வாகங்​கள் செயல்​படு​கிறதா என்​பதை ஆய்வு செய்து சம்​பந்​தப்​பட்ட அதி​காரி ஜூன் 15 அன்று நேரில் ஆஜராகி அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டும்​, என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யைத்​ தள்​ளி வைத்​துள்​ளார்.