ஈரான் போரின் போது மத்திய கிழக்குக்கு அனுப்பப்பட்ட அமெரிக்கப் படைகள் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகவும், இதனால் சிலர் தங்களுக்குக் கிடைக்கும் சொற்ப உணவைப் பங்கீடு செய்து நீண்டகாலப் பட்டினியைச் சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் ரோந்துப் பணியில் ஈடுபடும் போர்க்கப்பல்களில் உள்ள ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்கள் மற்றும் மாலுமிகள் உட்பட, 50,000இற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படை வீரர்கள் தற்போது மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் .
பெப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்கியதிலிருந்து பல கப்பல்கள் துறைமுகத்தை வந்தடையவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து , பகைமை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.
தற்போது இரு தரப்பினரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர் , ஆனால் அவற்றில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.





