மாமனிதர் அரசையாவின் நூற்றாண்டு நினைவுப் பகிர்வு!

மாமனிதர் அரசையாவின் நூற்றாண்டு நினைவுப் பகிர்வு நிகழ்வானது நேற்றைய தினம் 28.04.2026 பண்பாட்டு மலர்ச்சிக் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஈழத்து தமிழ் அரங்கின் எதிர்கால வளர்ச்சி பற்றியும், வலுவாக்கப்படும் ஈழத்து தமிழ் அரங்கின் ஊடாக தமிழ்ச் சமூக வளர்ச்சியை ஏற்படுத்துவதையும் கருத்திற் கொண்டு மாமனிதர் அரசையாவின் நினைவுகள் பகிரப்பட்டன.

தனது ஊரில் வண்ணை கலைவாணர் நாடகமன்றம் என்ற அமைப்பில் நாடக ஈடுபாட்டோடு நாடக முயற்சிகள் நடத்தியமை பற்றியும் நாடக நிகழ்ச்சிகளுக்கு அப்பால் நண்பர்கள் கூடும் இடங்களில் கதை சொல்லியாக விளங்கி நண்பர்களைக் குதூகலிக்க வைக்கும் இவரது ஆற்றல் பற்றியும் தனது இறுதிக் காலத்தில் ஈழத்துத் தமிழ் நவீன நாடகம் அதாவது மேற்கத்தய சாயலில் அமைந்த கல்வி நிறுவன நாடகங்கள் காரணமாக ஊர் நாடகங்கள் நலிவடைந்தது பற்றிய இவரது கவலை பற்றியும் பகிரப்பட்டன.

எதிர்காலத் திட்டமாக ஊர்களில் உள்ளுறைந்துள்ள படைப்பாற்றலை வெளிக்கொணர ஊக்கம் தரும் வகையிலும், ஊர் நாடக நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் ஊர் நாடகங்களுக்கான போட்டி ஒன்றை நிகழ்த்துவதைப் பற்றி அரங்க செயற்பாட்டுக் குழு அறிவித்தது.