இந்தியாவிலிருந்து நாட்டுக்கு கடத்திவரப்பட்ட கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 6 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ஒரு மில்லியன் ரூபாவாகும்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலாலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



