வருட இறுதி நாளை முன்னிட்டுக் காரைநகர் பிரதேச சபையின் தொலைநோக்கு எண்ணக்கருவிற்கு அமைய “தூய காரைநகர்” செயற்திட்டத்தில் உக்காத திண்மக் கழிவுகளை இலவசமாக அகற்றும் செயற்பாடு வெள்ளிக்கிழமை(29.12.2023), நாளை மறுதினம் சனிக்கிழமைகளில்(30.12.2023) காலை-08.30 தொடக்கம் மாலை-04 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, பொதுமக்கள் வசிப்பிடங்கள்,வணிக நிலையங்கள்,பொது இடங்கள்,வணக்கஸ்தலங்கள் ஆகிய இடங்களை சுத்தப்படுத்துவதற்கு ஏதுவாக இக் கழிவகற்றல் செயற்பாடு அமைவதுடன் இதன் மூலம் எம் பிரதேசத்தினையும் சுத்தமான பிரதேசமாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பினை நல்குமாறு காரைநகர் பிரதேச சபையினர் கேட்டுள்ளனர்.





