சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மார்கழித் திருவெம்பாவை கால விசேட நிகழ்வு வெள்ளிக்கிழமை(22.12.2023) முற்பகல்-10.15 மணி தொடக்கம் நண்பகல்-12 மணி வரை சிறப்புற இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் பக்கவாத்திய சகிதமாகப் பக்திப் பாடல்களைப் பண்ணுடன் ஓதினார்.





