ரோஹித அபேகுணவர்தனவின் மகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மத்துகம நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (31) காலை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட வாகனம் ஒன்றை தன்வசம் வைத்திருந்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ரோஹித அபேகுணவர்தனவின் மகள், வலானை குற்றத் தடுப்புப் பிரிவில் நேற்று புதன்கிழமை (30) சரணடைந்திருந்தார்.

இதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் வலானை குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்றைய தினம் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்